ADDED : ஜூன் 08, 2024 05:29 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம்நடராஜன் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி பரமேஸ்வரி, நீதிபதிகள் சாண்டில்யன், செந்தில்முரளி, அனிதா கிறிஸ்டி, ஆப்ரின் பேகம், மாவட்ட வன அலுவலர் பிரபா கலந்து கொண்டனர்.
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை., சமுதாய வானொலி நிலையத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
அழகப்பா பல்கலை., தேர்வாணையர் மு.ஜோதிபாசு வரவேற்றார். துணைவேந்தர் க.ரவி சமுதாயத் தோட்டத்தில் மரக்கன்று நட்டார்.
நிகழ்ச்சியில் மருத்துவர்மற்றும் சூழலியல் ஆர்வலர் மணிவண்ணன் பாராட்டினார். பேராசிரியர் கலையரசன், கல்வியியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார், சேது பாஸ்கரா கல்லுாரி பேராசிரியர் கருப்புராஜா வாழ்த்தினர். சுமதி நன்றி கூறினார்.