/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நாளை மறுநாள் பள்ளி திறப்பு; பள்ளத்தை மூட வலியுறுத்தல் நாளை மறுநாள் பள்ளி திறப்பு; பள்ளத்தை மூட வலியுறுத்தல்
நாளை மறுநாள் பள்ளி திறப்பு; பள்ளத்தை மூட வலியுறுத்தல்
நாளை மறுநாள் பள்ளி திறப்பு; பள்ளத்தை மூட வலியுறுத்தல்
நாளை மறுநாள் பள்ளி திறப்பு; பள்ளத்தை மூட வலியுறுத்தல்
ADDED : ஜூன் 08, 2024 05:29 AM

திருப்புவனம் : திருப்புவனம் நகர் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்களை பள்ளிகள் திறப்பதற்கு முன் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் வழங்குவதற்காக நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.
இந்திராநகர், நாடார் தெரு, புதூர் உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படவில்லை. பிரதான குழாய்கள் மட்டும் பதிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்கான இணைப்பு வழங்கப்பட இல்லை.
தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்று வரை இணைப்பு வழங்கப்பட இல்லை. சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்களையும் சரியாக மூட இல்லை.
10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளங்களில் மாணவ, மாணவியர் தவறி விழ வாய்ப்புண்டு, திருப்புவனம் புதூர் முஸ்லிம் பள்ளியின் முன்புற சுற்றுச் சுவர் அருகே குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியுள்ளது.
மாவட்ட நிர்வாகம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் உடனடியாக குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.