/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ புத்துயிர் பெறுமா ஊராட்சி நாற்றங்கால் பண்ணை புத்துயிர் பெறுமா ஊராட்சி நாற்றங்கால் பண்ணை
புத்துயிர் பெறுமா ஊராட்சி நாற்றங்கால் பண்ணை
புத்துயிர் பெறுமா ஊராட்சி நாற்றங்கால் பண்ணை
புத்துயிர் பெறுமா ஊராட்சி நாற்றங்கால் பண்ணை
ADDED : ஜூலை 07, 2024 11:36 PM

சிங்கம்புணரி; சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியத்தில் நாற்றங்கால் பண்ணைகளை மீண்டும் புத்துயிர் கொடுத்து பராமரிக்க இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மத்திய அரசின் 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் பரவலாக பலன் தருவதால் தேவையான மரக்கன்றுகளை அந்தந்த ஊராட்சிகளே பண்ணை அமைத்து உற்பத்தி செய்து கொள்ள உத்தரவிடப்பட்டது.
இதற்காக அனைத்து ஊராட்சிகளுக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு பண்ணைகள் அமைத்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய வலியுறுத்தப்பட்டது.
சில ஊராட்சிகளில் பண்ணைகள் பெயரளவுக்கு அமைக்கப்பட்டு தற்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. பல இடங்களில் பண்ணைகள் முறையாக செயல்படாததால் இத்திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகி வருகிறது.
சிறிய அளவிலான மரக்கன்றுகளாக அல்லாமல் 6 அடி உயரத்திற்கு பதியம் போட்டு உருவாக்கப்பட்ட மரக்கன்றுகளை இப்பண்ணைகளில் உருவாக்கி பராமரித்தால் கூடுதல் பயன் தரும் என்கிறார்கள் விவசாயிகள்.
எனவே மாவட்ட நிர்வாகம் சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் நாற்றங்கால் பண்ணைகளை முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.