மின் ஊழியர் காத்திருப்பு போராட்டம்
மின் ஊழியர் காத்திருப்பு போராட்டம்
மின் ஊழியர் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 10, 2024 05:23 AM

சிவகங்கை, : மின்வாரியத்தில் 55,000 காலிப்பணியிடம் நிரப்புவது உட்பட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி சிவகங்கையில் மின் ஊழியர் மத்திய அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ஆர்.கருணாநிதி தலைமை வகித்தார்.
பொருளாளர் மோகன சுந்தரம், துணை தலைவர் சுப்புராம் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன் விளக்க உரை ஆற்றினார். ஓய்வு பெற்ற மின் ஊழியர் சங்க நிர்வாகி விநாயகமூர்த்தி உட்பட கோட்ட, மாவட்ட, நகர் நிர்வாகிகள் உட்பட மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாரியத்தில் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடத்தை நிரப்ப வேண்டும். பணப்பயன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.
குடும்ப நல நிதி ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். மாநில செயலாளர் எஸ்.உமாநாத் நிறைவுரை ஆற்றினார்.