/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து; மவுனம் காக்கும் உள்ளாட்சி அமைப்புகள் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து; மவுனம் காக்கும் உள்ளாட்சி அமைப்புகள்
சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து; மவுனம் காக்கும் உள்ளாட்சி அமைப்புகள்
சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து; மவுனம் காக்கும் உள்ளாட்சி அமைப்புகள்
சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து; மவுனம் காக்கும் உள்ளாட்சி அமைப்புகள்
ADDED : ஜூலை 10, 2024 05:24 AM

காரைக்குடி : காரைக்குடி அருகே கோவிலுாரில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மாடுகளை விரட்டும் பணியில் போலீசார் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.
காரைக்குடி கண்டனுார் புதுவயல் கோட்டையூர் கோவிலுார் உட்பட பல பகுதிகளிலும் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. மாலை மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக மாடுகள் சாலைகளில் படுத்தே விடுகின்றன. இரவில் ரோட்டில் மாடுகள் படுத்திருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்கும் நிலை நிலவி வருகிறது. தவிர போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
காரைக்குடியின் முக்கிய நுழைவு வாயிலாக கோவிலுார் செக்போஸ்ட் உள்ளது. இங்கு வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று சாலை சந்திப்பான இங்கு மாலை நேரங்களில் 30க்கும் மேற்பட்ட மாடுகள் கூட்டமாக சாலையில் படுத்து விடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. வேறு வழியின்றி செக் போஸ்டில் உள்ள போலீசாரே இவற்றை விரட்டி போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டியுள்ளது.ரோட்டில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த சட்டசபையில் முடிவெடுத்து மாட்டின் உரிமையாளர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அபராதம் விதிக்கப்படும், மீண்டும் மாடுகளை ரோட்டில் நடமாட விட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டும், உள்ளாட்சி அமைப்புகள் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை. மாடுகளை பிடித்து செல்ல போதிய வாகனம் இல்லாததால் அவற்றை கட்டி போட்டு பராமரிக்க முடியாத நிலை நீடிப்பதால் மாடுகளை அவர்கள் பிடிப்பதே இல்லை.