ADDED : ஜூன் 01, 2024 04:35 AM
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள செய்யாலுார் கிராமத்தை சேர்ந்த துரைராஜ் மகன் தங்கபாலு 65, இவர் சன்னதி புதுக்குளம் ஊராட்சி துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
இவர் டூவீலரில் மானாமதுரை, மதுரை நான்கு வழிச்சாலையில் கிருங்காகோட்டை விலக்கில் திரும்பிய போது பின்னால் ராமநாதபுரத்திலிருந்து வந்த கார் மோதியதில் பலியானார். மானாமதுரை போலீசார் காரை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த சம்சுதீன் ஹாசனை கைது செய்தனர்.