/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பள்ளிகள் மேம்பாட்டிற்கு ரூ 75 லட்சம் பள்ளிகள் மேம்பாட்டிற்கு ரூ 75 லட்சம்
பள்ளிகள் மேம்பாட்டிற்கு ரூ 75 லட்சம்
பள்ளிகள் மேம்பாட்டிற்கு ரூ 75 லட்சம்
பள்ளிகள் மேம்பாட்டிற்கு ரூ 75 லட்சம்
ADDED : ஜூன் 01, 2024 04:34 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ 15 லட்சம் மதிப்பிலும், தென்மாப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ 60 லட்சம் மதிப்பிலும் பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
அரசு தரப்பில் அரசு பள்ளிகள் வாரியாக அடிப்படைத் தேவைகள் குறித்து கடந்த ஆண்டு கேட்கப்பட்டிருந்தது. முதற் கட்டமாக சில பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் திருப்புத்தூர் ஆ.பி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை, பள்ளி வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசுதல் . பராமரிப்பு பணிகளுக்கு ரூ 15 லட்சம் ஒதுக்கீடு ஆகி விரைவில் பணிகள் துவங்க உள்ளன. தென்மாப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளிக்கான சுற்றுச்சுவர், கழிப்பறை மற்றும் சேதமான வகுப்பறைக் கட்டட பராமரிப்புக்கு ரூ 60 லட்சம் ஒதுக்கீடு ஆகியுள்ளது. தேர்தல் நடத்தை காலம் முடிந்த பின் டெண்டர் நடந்து பணிகள் துவக்கப்படும் என்று பேரூராட்சித் தரப்பில் கூறப்பட்டுள்ளது.