/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பராமரிப்பில்லாத மீனாட்சி நகர் பூங்கா பராமரிப்பில்லாத மீனாட்சி நகர் பூங்கா
பராமரிப்பில்லாத மீனாட்சி நகர் பூங்கா
பராமரிப்பில்லாத மீனாட்சி நகர் பூங்கா
பராமரிப்பில்லாத மீனாட்சி நகர் பூங்கா
ADDED : ஜூன் 21, 2024 04:40 AM

சிவகங்கை:சிவகங்கை நகராட்சிமீனாட்சி நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கக்கூடிய மக்கள், குழந்தைகள் விடுமுறை நாட்கள், மாலையில் பொழுது போக்க நகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த பூங்கா முழுவதும் பராமரிப்பு இன்றி குப்பை நிறைந்து காணப்படுகிறது. பூங்காவில் ஆங்காங்கே குப்பை கொட்டப்பட்டுஉள்ளது. பூங்கா முழுவதும்துர்நாற்றம் வீசுகிறது. சிறுவர்கள் விளையாட அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. நடைபாதை முழுவதும் பராமரிப்பு இல்லாமல் குப்பை தேங்கி கிடக்கிறது. பூங்காவை முறையாக பராமரித்தால் முதியோர்கள், பெண்கள் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கும், சிறுவர்கள் விளையாடுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.