Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனம் மருத்துவமனையில் மந்தநிலையில் கட்டுமான பணி அதிகாரிகள் பாராமுகம்

திருப்புவனம் மருத்துவமனையில் மந்தநிலையில் கட்டுமான பணி அதிகாரிகள் பாராமுகம்

திருப்புவனம் மருத்துவமனையில் மந்தநிலையில் கட்டுமான பணி அதிகாரிகள் பாராமுகம்

திருப்புவனம் மருத்துவமனையில் மந்தநிலையில் கட்டுமான பணி அதிகாரிகள் பாராமுகம்

ADDED : ஜூலை 22, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
திருப்புவனம்: திருப்புவனம் தாலுகாவில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால் ஒப்பந்தகாரர்கள் அலட்சியத்துடன் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

திருப்புவனத்தில் அரசு சார்பில் நலத்திட்ட பணிகள், கட்டுமான பணிகள் உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் அரசு மருத்துவமனையில் சீமாங் அவசர கால மகப்பேறு திட்டத்தின் கீழ் கூடுதல் கட்டடங்கள் கட்டுமான பணிகள் கடந்த மார்ச்சில் தொடங்கப்பட்டன. எம்.பி., தேர்தல் நடத்தை விதியால் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கட்டுமான பணிகள் குறித்த எந்த விபர பலகையும் அமைக்கவில்லை. எத்தனை கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. பணிகள் முடிவடையும் தேதி, பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் என எந்த தகவலும் இல்லை. திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள், உறவினர்கள், போலீசார் உள்ளிட்ட பலரும் வந்து செல்கின்றனர். நான்கு வழிச்சாலையில் நிகழும் விபத்துகள் உள்ளிட்ட சம்பவங்களில் முதல் உதவி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தான் அழைத்து வரப்படுகின்றனர்.

கட்டுமான பணிகளுக்காக பாதையிலேயே மணல், ஜல்லி, இரும்பு கம்பிகள், சிமெண்ட் மூடைகள் உள்ளிட்டவைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகளின் போது தூசிகள் உள்ளிட்டவைகள் பரவி நோயாளிகளை மூச்சு திணற வைக்கின்றன. பாதுகாப்பு வலைகள் ஏதும் இன்றி பணிகள் மேற்கொள்ளப்படுவதாக நோயாளிகள், உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us