/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கைகள் இல்லை காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கைகள் இல்லை
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கைகள் இல்லை
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கைகள் இல்லை
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கைகள் இல்லை
ADDED : ஜூன் 13, 2024 06:09 AM

காரைக்குடி: காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருக்கை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடியிலிருந்து மதுரை, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர், சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகிறது. சுற்றுலாத்தலமான காரைக்குடிக்கு பலர் தினமும் வந்து செல்கின்றனர். தினமும் அதிக பயணிகள் வந்து செல்லும் புது பஸ் ஸ்டாண்டில் குடிநீர் வசதி இல்லை.
வெயில் காலம் என்பதால் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அலைகின்றனர். பஸ் ஸ்டாண்டில் பல லட்சம் செலவில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
பயணிகள் அமர போதிய இருக்கை வசதி செய்து தரப்படவில்லை.