/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இரவல் நகையை தொலைத்த பெண் மீட்டுக் கொடுத்த போலீசார் இரவல் நகையை தொலைத்த பெண் மீட்டுக் கொடுத்த போலீசார்
இரவல் நகையை தொலைத்த பெண் மீட்டுக் கொடுத்த போலீசார்
இரவல் நகையை தொலைத்த பெண் மீட்டுக் கொடுத்த போலீசார்
இரவல் நகையை தொலைத்த பெண் மீட்டுக் கொடுத்த போலீசார்
ADDED : ஜூலை 14, 2024 05:47 AM

திருப்புத்துார் : திருப்புத்துாரில் இரவல் நகையை தொலைத்த பெண்ணின் நகையை போலீசார் கூட்டு முயற்சியில் கண்டுபிடித்து கொடுத்தனர்.
திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் திருப்பதி மனைவி முத்துலட்சுமி. உறவினரின் திருமணத்திற்கு கடந்த வாரம் திருப்புத்துார் வந்தார்.
திருமணத்திற்கு போட்டுக் கொள்ள, உறவினரின் 7 பவுன் தங்க நகையை இரவல் வாங்கி வந்திருந்தார்.
திருமணம் முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் கையில் வைத்திருந்த நகை திருப்புத்துார் அண்ணாத்துரை சிலை பகுதியில் காணாமல் போனது.
தேடிப்பார்த்தவர், கிடைக்காததால் முத்துலெட்சுமி போலீசில் புகார் செய்தார்.
எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரவி ஆகியோர் விசாரித்தனர். மேலும் எஸ்.ஐ.செல்வபிரபு, போலீஸ் ராஜதுரை ஆகியோர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அப்பகுதியில் நகையை எடுத்தவர் அடையாளம் தெரிந்தது.
எஸ்.ஐ. இளையராஜா நேரில் விசாரித்த போது நகையை எடுத்தவர், அப்பகுதியில் தகவல் தெரிவித்ததும் தெரியவந்தது. நகையை எடுத்த முருகன் போலீசாரிடம் நகையை ஒப்படைத்தார்.
டி.எஸ்.பி.ஆத்மநாதன் தலைமையில் போலீசார் நகையை முத்துலெட்சுமியிடம் ஒப்படைத்தனர்.