/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஜூன் 13ல் ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு ஜூன் 13ல் ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு
ஜூன் 13ல் ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு
ஜூன் 13ல் ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு
ஜூன் 13ல் ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு
ADDED : ஜூன் 09, 2024 05:09 AM

சிவகங்கை : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், ரவி, குமரேசன், மாவட்ட துணை தலைவர் அமலசேவியர், துணை செயலாளர்கள் கஸ்துாரி, பஞ்சுராஜ், முத்துக்குமார், சிவகங்கை கல்வி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 160ன் படி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும்.
ஆனால், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை மேற்கொண்டுள்ள இன்சூரன்ஸ் நிறுவனமும், அந்நிறுவனத்திடம் மூன்றாம் நபர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள காப்பீட்டு நிறுவனங்களும் அரசின் அரசாணையை மதிக்காமல் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிகிச்சைக்கான கட்டணத்தில் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே அனுமதிக்கிறது.
இதன் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத்துவதோடு, காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் தாமாகவே மாதந்தோறும் வருமான வரிப் பிடித்தம் செய்யும் முறையைக் கைவிட்டு, பழைய நடைமுறைப்படி ஆசிரியர்களின் விருப்பப்படி முன்பு போல் வருமான வரி செலுத்திட அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 13 அன்று மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.