/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாவட்டத்தில் 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு மாவட்டத்தில் 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு
மாவட்டத்தில் 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு
மாவட்டத்தில் 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு
மாவட்டத்தில் 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு
ADDED : ஜூன் 09, 2024 05:01 AM
சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்கி டி.ஐ.ஜி., துரை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவல்துறையில் கடந்த 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்து போலீசாக 10 ஆண்டு, முதல் நிலை போலீசாக 5 ஆண்டுகள், தலைமை போலீசாக 10 ஆண்டு என 25 ஆண்டுகள் பணியாற்றி மாவட்டத்திலுள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணபுரிந்து வரும் ஏட்டுகள் 39 பேருக்கும், ஆயுதப் படையில் பணியாற்றி வரும் தலைமை போலீசார் 3 பேர் என 42 பேர் சிறப்பு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் டி.ஐ.ஜி., துரை பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.