Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ போலீஸ் ஸ்டேஷனில் தீர்வு கிடைக்காததால் தற்கொலை தளமாகும் கலெக்டர் அலுவலகம்   

போலீஸ் ஸ்டேஷனில் தீர்வு கிடைக்காததால் தற்கொலை தளமாகும் கலெக்டர் அலுவலகம்   

போலீஸ் ஸ்டேஷனில் தீர்வு கிடைக்காததால் தற்கொலை தளமாகும் கலெக்டர் அலுவலகம்   

போலீஸ் ஸ்டேஷனில் தீர்வு கிடைக்காததால் தற்கொலை தளமாகும் கலெக்டர் அலுவலகம்   

ADDED : ஜூலை 24, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை : போலீஸ் ஸ்டேஷன்களை நாடிச் செல்லும் மக்களுக்கு சரியான தீர்வினை போலீஸ் அதிகாரிகள் வழங்காததால் பாதிக்கப்படுவோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் இறங்குவது சிவகங்கையில் தொடர்கிறது.

காரைக்குடி வ.உ.சி., ரோடு சேர்வார் ஊரணியை சேர்ந்தவர் சரிதா 39, இவரது மகள் மகாலட்சுமி 19 இருவரும், காரைக்குடி வடக்கு மற்றும் தெற்கு போலீசார் சரிதாவின் இரு மகன்கள் மீதும் பொய் வழக்கு போடுவதாக கூறி, ஜூலை 5 ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போதே, தாய், மகள் இருவரும் போலீசை கண்டித்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தனர்.

அங்கு பாதுகாப்பில் இருந்த எஸ்.ஐ.,முயற்சியால், இருவரிடமிருந்தும் மண்ணெண்ணெய் கேனை பறித்து, அவர்களை காப்பாற்றினார்.

அதே போன்று ஜூலை 22 அன்று குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த மானாமதுரை அருகே கல்குளத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது நிலத்தை சிலர் ஆக்கிரமித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனக்கூறி கலெக்டரிடம் புகார் அளிக்க வந்த நிலையில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.

அவரையும் போலீசார் மீட்டனர். நேற்று மதியம் 1:00 மணிக்கு தேவகோட்டை அருகே நாகவயலை சேர்ந்த ஜேசு மனைவி காளீஸ்வரி 30, தனது கைக்குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். போலீசார் அவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இவரும், குடும்ப பிரச்னை தொடர்பாக சிவகங்கை மகளிர் போலீசார் சரியாக விசாரிக்கவில்லை எனக்கூறி, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து இது போன்று மாவட்ட அளவில் போலீஸ் ஸ்டேஷன்களில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத சூழலில் அதிருப்தியாவோர், கலெக்டர் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யும் இடமாக மாற்றி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us