/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குறைதீர் முகாமில் ரேஷன் கார்டு கேட்டு குவிந்த மக்கள் சமரசப்படுத்திய அதிகாரிகள் குறைதீர் முகாமில் ரேஷன் கார்டு கேட்டு குவிந்த மக்கள் சமரசப்படுத்திய அதிகாரிகள்
குறைதீர் முகாமில் ரேஷன் கார்டு கேட்டு குவிந்த மக்கள் சமரசப்படுத்திய அதிகாரிகள்
குறைதீர் முகாமில் ரேஷன் கார்டு கேட்டு குவிந்த மக்கள் சமரசப்படுத்திய அதிகாரிகள்
குறைதீர் முகாமில் ரேஷன் கார்டு கேட்டு குவிந்த மக்கள் சமரசப்படுத்திய அதிகாரிகள்
ADDED : ஜூன் 16, 2024 04:52 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து 9 மாதத்திற்கு மேலாகியும் கார்டு வழங்காததால் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் முறையிட்டனர். விண்ணப்பித்தவர்களுக்கு கார்டு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சமாதானம் கூறி அதிகாரிகள் அனுப்பினர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாவில் 15 லட்சத்திற்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் புதிதாக திருமணமாகி தனியாக செல்வோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து 9 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ரேஷன் கார்டு வழங்கவில்லை. சிவகங்கை தாலுகாவில் மட்டும் 795 பேர் புதிய ரேஷன் கார்டுக்கு பதிந்து 9 மாதமாக காத்திருக்கின்றனர். ரேஷன் கார்டு இல்லாததால் தமிழக அரசு வழங்கக்கூடிய குடிமைப் பொருட்கள் பெற முடிவதில்லை. காஸ் இணைப்பு, முதல்வரின் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடந்தது. பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், அலைபேசி எண் பதிவு உள்ளிட்ட பணிகள் சிறப்பு முகாமில் நடந்தது. சிவகங்கையில் நடந்த சிறப்பு முகாமில் முகவரி மாற்றம் 1, போன் எண் மாற்றம் 6, பெயர் திருத்தம் 8 உள்ளிட்ட 15 மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் புதிய ரேஷன் கார்டுக்கு பதிந்து காத்திருக்கும் பெரும்பாலானோர் தங்களுக்கு ரேஷன் கார்டு எப்போது வரும் என்று கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.
வட்ட வழங்க அலுவலர்கள் கூறுகையில், ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், அலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை குறைதீர் முகாம்களில் செய்து வருகிறோம். புதிய ரேஷன் கார்டு வழங்குவது குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். புதிதாக பதிந்த அனைவருக்கும் கூடிய விரைவில் கார்டு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றனர்.