ADDED : மார் 13, 2025 04:58 AM

மானாமதுரை: வெள்ளிக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா தலைமை ஆசிரியர் அருண்மொழி தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியை ராஜ சுப்புலட்சுமி வரவேற்றார். ஓய்வு ஆசிரியர் கண்ணப்பன் வள்ளுவம் காட்டும் வாழ்வியல்என்ற தலைப்பில் பேசினார்.10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், திருக்குறளை ஒப்புவித்த மாணவர்களுக்கும் பரிசுளை வழங்கி பாராட்டினார். புலவர் காளிராசா மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள்,கிராம மக்கள் கலந்து கொண்டனர்.