/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மருத்துவமனைக்கு பிரீசர் பெட்டி வழங்கல் மருத்துவமனைக்கு பிரீசர் பெட்டி வழங்கல்
மருத்துவமனைக்கு பிரீசர் பெட்டி வழங்கல்
மருத்துவமனைக்கு பிரீசர் பெட்டி வழங்கல்
மருத்துவமனைக்கு பிரீசர் பெட்டி வழங்கல்
ADDED : ஜூலை 19, 2024 11:59 PM
மானாமதுரை : மானாமதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் ஒரே நேரத்தில் 6 உடல்களை வைக்கும் குளிர்சாதன வசதி உள்ளது.
கடந்த ஒரு வருடமாக இந்த குளிர்சாதனபெட்டி பழுதடைந்து இயங்காத காரணத்தினால் இங்கு உடற்கூறாய்வுக்காக வரும் உடல்களை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதால் இறந்தவர்கள் உறவினர்கள் சிரமப்பட்டனர்.
இதையறிந்த தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன் தன்னிடம் உள்ள ஒரு குளிர்சாதன பெட்டியை மானாமதுரை அரசு மருத்துவ அலுவலரிடம் இலவசமாக உடல்களை பாதுகாக்க வழங்கினார்.