/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இரண்டாமாண்டு பி.இ., நேரடி மாணவர் சேர்க்கை இரண்டாமாண்டு பி.இ., நேரடி மாணவர் சேர்க்கை
இரண்டாமாண்டு பி.இ., நேரடி மாணவர் சேர்க்கை
இரண்டாமாண்டு பி.இ., நேரடி மாணவர் சேர்க்கை
இரண்டாமாண்டு பி.இ., நேரடி மாணவர் சேர்க்கை
ADDED : ஜூலை 05, 2024 02:10 AM
காரைக்குடி:பி.இ., பி.டெக்., இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 7ல் முடிவடைகிறது.
காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லுாரி முதல்வர், இணை ஒருங்கிணைப்பாளர் உமாராணி கூறியதாவது: பி.இ., பி.டெக்., இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 8 துவங்கியது. ஜூலை 7 நிறைவடைகிறது. பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் பி.இ., பி.டெக்., நேரடி இரண்டாமாண்டு சேரலாம். இதற்கான கவுன்சிலிங்கை ஆண்டுதோறும் காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
விண்ணப்பங்கள் சரிபார்ப்பு நிறைவு பெற்று, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. விண்ணப்ப சரிபார்ப்புக்கு மாணவர்கள் நேரில் வர வேண்டியதில்லை. விண்ணப்ப நிலையை இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்து தாங்கள் விரும்பும் கல்லுாரியை தேர்வு செய்து கொள்ளலாம். பி.எஸ்.சி., படிப்பில் கணிதத்தை விருப்ப பாடமாக படித்த மாணவர்களும் இரண்டாமாண்டு இன்ஜி., படிப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.