ADDED : ஜூலை 05, 2024 04:42 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சி அலுவலகம், கவுன்சில் கூட்ட அரங்கிற்கு தனி கட்டடம் கட்டித்தர வேண்டும் என சிறப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
சிவகங்கை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களின் சிறப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. தலைவர் பொன்.மணிபாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் கலைக்குமார் ராஜன் முன்னிலை வகித்தார். அனைத்து வார்டுகளின் மாவட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் மற்றும் கவுன்சிலர்கள் கூட்ட அரங்கு புதிதாக கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றினர்.