ADDED : மார் 12, 2025 12:52 AM
தேவகோட்டை; தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை மெட்ரிக்., பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர்
லட்சுமணன் தலைமை வகித்தார். மாணவி மவுசிகா வரவேற்றார். முதல்வர் தேவி அறிக்கை வாசித்தார். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் பரிசு வழங்கினார். ஆசிரியை கற்பகம் தொகுத்து வழங்கினார். ஆசிரியை பாரதி நன்றி கூறினார்.
* இளங்குடி அரசு நடுநிலை பள்ளி ஆண்டு விழாவில் ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். தலைமையாசிரியர் செல்வி அறிக்கை வாசித்தார். பி.டி.ஓ., பாஸ்கரன் பரிசு வழங்கினார். ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.