/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனம் சந்தையில் ஆயுதங்கள் விற்பனை திருப்புவனம் சந்தையில் ஆயுதங்கள் விற்பனை
திருப்புவனம் சந்தையில் ஆயுதங்கள் விற்பனை
திருப்புவனம் சந்தையில் ஆயுதங்கள் விற்பனை
திருப்புவனம் சந்தையில் ஆயுதங்கள் விற்பனை
ADDED : ஜூலை 18, 2024 06:18 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் திறந்த வெளியில் கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதால் இதை வாங்கி செல்லும் சிலரால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி அருவா தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. இரண்டு ஊர்களிலும் சேர்த்து 50க்கும் மேற்பட்ட பட்டறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அருவா, மண்வெட்டி, கோடாரி, நேர்த்திக்கடன் அருவா உள்ளிட்டவை தயாரிக்கின்றனர். போலீசார் பட்டறை உரிமையாளர்களிடம் அடிக்கடி அருவா உள்ளிட்ட பொருட்களை பட்டறை வாசலில் காட்சிப்படுத்த கூடாது மீறினால் வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் அரிவாள் தயாரிப்பவர்கள் குறித்த விவரமும் போலீசாரிடம் உள்ளது. பட்டறை வாசலில் கூர்மையான ஆயுதங்கள் காட்சிப்படுத்தும் போது சிலர் சாதாரண தகராறில் கூட ஆவேசமடைந்து ஆயுதத்தை எடுத்து பயன்படுத்த வாய்ப்புண்டு என்பது போலீசாரின் எண்ணம். எனவே தடை விதித்து வருகின்றனர்.
ஆனால் திருப்புவனம் வாரச்சந்தை, தினசரி சந்தை உள்ளிட்ட நாட்களில் வடமாநில தொழிலாளர்கள் பலரும் கத்தி, அருவா உள்ளிட்ட பொருட்களை ரோட்டிலேயே பரப்பி விற்பனை செய்கின்றனர்.
திருப்புவனத்தில் செவ்வாய்கிழமை நடந்த ஆடி சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் கேரளா, தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர். உள்ளுர் வியாபாரிகளும், வெளியூர் வியாபாரிகளும் போட்டி போட்டு ஆடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டிருந்தனர். பேரம் பேசுவதில் தகராறும் ஏற்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில்: உள்ளுர் வியாபாரிகளுக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆனால் வெளியூர் வியாபாரிகளுக்கு இது பொருந்தாது போலும், போலீசார் கட்டுப்பாட்டை அனைத்து தரப்பினரும் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும், என்றனர்.