Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பாண்டுரங்கன் கோயிலில்  ஆஷாட ஏகாதசி விழா 

பாண்டுரங்கன் கோயிலில்  ஆஷாட ஏகாதசி விழா 

பாண்டுரங்கன் கோயிலில்  ஆஷாட ஏகாதசி விழா 

பாண்டுரங்கன் கோயிலில்  ஆஷாட ஏகாதசி விழா 

ADDED : ஜூலை 18, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை : சிவகங்கை ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயிலில் ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.

சிவகங்கை பெருமாள் கோயில் அருகே உள்ள இக்கோயிலில் ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு விநாயகருக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. அன்று ஒரு நாள் ரகுமாயி பாண்டுரங்கன் உற்ஸவ மூர்த்தி திருவடிகளை பக்தர்கள் தொட்டு வணங்கினர். நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை, அர்ச்சனை நடந்தது.

அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாலை 6:00 மணிக்கு மதுரை ராமகிருஷ்ண பஜன் மண்டலி குழுவினரின் சிறப்பு பஜனை நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு பாண்டுரங்கன், ரகுமாயி திருவீதி உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் பாண்டுரங்கனை தரிசித்தனர். விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us