/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பிரத்தியங்கிரா கோயிலில் சகஸ்ர சண்டி மகா யாகம் பிரத்தியங்கிரா கோயிலில் சகஸ்ர சண்டி மகா யாகம்
பிரத்தியங்கிரா கோயிலில் சகஸ்ர சண்டி மகா யாகம்
பிரத்தியங்கிரா கோயிலில் சகஸ்ர சண்டி மகா யாகம்
பிரத்தியங்கிரா கோயிலில் சகஸ்ர சண்டி மகா யாகம்
ADDED : ஆக 04, 2024 06:07 AM
மானாமதுரை : மானாமதுரை பிரத்தியங்கிரா தேவி கோயிலில் உலக நன்மைக்காக சகஸ்ர சண்டி மகா யாகம் துவங்கி நடைபெற்று வருகிறது.
மானாமதுரை பிரத்தியங்கிரா தேவி கோயிலில் இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து பூர்வாங்கம் அங்குரார்ப்பணம், ரக்க்ஷா பந்தனம், தட்ஷணகாளி, வனதுர்கா பரமேஸ்வரி ஹோமம், சஷ்டி பைரவர் பூஜை, உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் தஞ்சை கணபதி சுப்ரமணியம் சாஸ்திரி தலைமையில் யாகத்தை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத தம்பதிகளுக்காக புத்தக காமேஷ்டி யாகமும் இயற்கை பேரழிவு நடைபெறாமல் இருக்க வனதுர்க்கை ஹோமமும் நடைபெறுகிறது.
இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சகஸ்ர சண்டி மகா யாகமும் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை பிரத்தியங்கரா தேவி மடாலய நிர்வாகிகள் ஞானசேகரன், மாதாஜி ஆகியோர் செய்து வருகின்றனர்.