Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பாதிப்பு மாறுதலாகி செல்லும் தலைமை ஆசிரியர்களால் காலியாகும் எஸ்.புதுார் ஒன்றிய பள்ளிகள்

பாதிப்பு மாறுதலாகி செல்லும் தலைமை ஆசிரியர்களால் காலியாகும் எஸ்.புதுார் ஒன்றிய பள்ளிகள்

பாதிப்பு மாறுதலாகி செல்லும் தலைமை ஆசிரியர்களால் காலியாகும் எஸ்.புதுார் ஒன்றிய பள்ளிகள்

பாதிப்பு மாறுதலாகி செல்லும் தலைமை ஆசிரியர்களால் காலியாகும் எஸ்.புதுார் ஒன்றிய பள்ளிகள்

ADDED : ஜூலை 27, 2024 05:20 AM


Google News
எஸ்.புதுார், : எஸ்.புதுார் ஒன்றியத்தில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு மாறுதலாகி செல்லும் ஆசிரியர்களால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பின்தங்கிய ஒன்றியமான இங்கு 47 துவக்கப் பள்ளிகளும், 13 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. வெளியூர்களில் இருந்து முதலில் பணி ஆணை பெற்று வந்த பலர் இங்கு பணியாற்றி வருகின்றனர். தற்போது நடந்து வரும் மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு மூலம் பல ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்று சென்றுள்ளனர்.

இதனால் இவ்வொன்றியத்தில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 4 பள்ளிகளில் உதவி தலைமை ஆசிரியரும் இல்லாமல் உதவி ஆசிரியர்கள் மட்டுமே பள்ளியை நிர்வகித்து வருகின்றனர். வர்ணபட்டி, குளத்துப்பட்டி, சின்னாரம்பட்டி, வேலம்பட்டி ஆகிய பள்ளிகளில் ஒட்டு மொத்த ஆசிரியர்களும் பணி மாறுதல் பெற்று சென்று விட்டதால் அப்பள்ளிகளில் ஆசிரியர்கள் யாரும் இல்லாத நிலை உருவாகிவிட்டது.

பக்கத்து ஊர் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் கூடுதல் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். அதே நேரம் வேறு ஊர்களில் இருந்து இங்கு பணி மாறுதல் பெற்றுவர ஆசிரியர்கள் பலர் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. இந்நிலையில் மேலும் பல ஆசிரியர்கள் இவ்வொன்றியத்தை காலி செய்து விட்டு தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் எஸ்.புதுார் ஒன்றிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. டெபுடேசன் காரணமாக ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு பள்ளிகளில் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே வேறு ஊர்களில் இருந்து இவ்வொன்றியத்திற்கு ஆசிரியர்கள் மாறுதல் பெற்று வரும் வரை இடைக்கால ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us