/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து நெரிசல் சிவகங்கையில் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து நெரிசல்
சிவகங்கையில் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து நெரிசல்
சிவகங்கையில் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து நெரிசல்
சிவகங்கையில் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 14, 2024 05:06 AM

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பின்புறம்,அரண்மனை வாசல், நேருபஜார் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களாலும் ஆக்கிரமிப்பு கடைகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வழியாக கலெக்டர் அலுவலகம் செல்லும் ரோடு, முகூர்த்த காலங்களில் உழவர்சந்தை ரோடு, நேருபஜாரில் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதால் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகரில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக அவசரமாக மருத்துவக் கல்லுாரி செல்வதற்கு நேருபஜார் ரோட்டை பயன்படுத்துகின்றனர். நேருபஜாரில் டூவீலரில் செல்வதே மிகவும் சிரமமாக உள்ளது. அந்த அளவிற்கு ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.
மேலும் அரண்மனை ரோட்டில் டூவீலர் மட்டுமின்றி கார் மற்றும் சரக்கு வாகனங்களும் வரிசையாக நிறுத்தப்படுகிறது.
மேலும் கடைகளின் விளம்பர பிளக்ஸ் பேனர்களும் ரோட்டின் நடுவிலுள்ள டிவைடரில் ரோட்டை மறைத்து வைக்கின்றனர். அவ்வழியாக வாகனங்களில் செல்லும் போது வாகனங்கள் வருவது தெரியாமல் ஏற்படுகிறது. விதியை மீறி ரோட்டின் நடுவில் பிளக்ஸ்வைப்போர் மீதும் வாகனங்களை நிறுத்துவோர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.