Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பயன்பாடு இல்லாமல் பாழாகும் மையம் பத்து ஆண்டாக பூட்டிக் கிடக்கும் அவலம்

பயன்பாடு இல்லாமல் பாழாகும் மையம் பத்து ஆண்டாக பூட்டிக் கிடக்கும் அவலம்

பயன்பாடு இல்லாமல் பாழாகும் மையம் பத்து ஆண்டாக பூட்டிக் கிடக்கும் அவலம்

பயன்பாடு இல்லாமல் பாழாகும் மையம் பத்து ஆண்டாக பூட்டிக் கிடக்கும் அவலம்

ADDED : ஜூன் 14, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கட்டப்பட்ட ஊராட்சி சேவை மையக் கட்டடங்கள் எந்த பயன்பாடும் இல்லாமல் 10 ஆண்டுகளாக பூட்டி கிடப்பதால் அரசு நிதி வீணாகிறது.

இவ்வொன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளிலும் கடந்த 2014ல் மத்திய அரசின் நிதிப்பங்களிப்புடன் ஊராட்சி சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டது.

பல்வேறு குளறுபடி, தாமதங்களுக்கு மத்தியில் ஒரு வழியாக அனைத்தும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் எந்த பயன்பாடும் இல்லாமல் பல இடங்களில் பூட்டியே கிடக்கிறது.

இக்கட்டத்திற்கு இணையதள இணைப்பு கொடுத்து அரசின் பல்வேறு இ சேவை திட்டங்களை ஒரே இடத்தில் வழங்குவதற்காக 13 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து பல்வேறு வடிவங்களில் கட்டப்பட்டது.

திறப்பு விழா காணாமல் பூட்டப்பட்டு கட்டடங்கள் பாழாகி வந்த நிலையில் பழுதுபார்க்கப்பட்டு வந்தது.

ஒரு சில இடங்களில் மட்டும் வேளாண்மை, மகளிர் சுய உதவிக் குழு உள்ளிட்ட பணிகளுக்கு இக்கட்டடம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பல ஊராட்சிகளில் எந்தவித பயன்பாடும் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. பல லட்சம் ரூபாய் செலவழித்து கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடம் இப்படி பயன்பாட்டில் வராமல் வீணாகி வருவது சமூக ஆர்வலர்களுக்கு கவலையை தருகிறது.

எனவே அனைத்து சேவை மைய கட்டடங்களையும் முறையாக திறந்து ஊராட்சி தொடர்பான பணிகளுக்கும் மக்களின் இ சேவை தொடர்பான பணிகளுக்கும் பயன்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us