ADDED : ஜூலை 02, 2024 11:07 PM
காரைக்குடி:அமராவதிப்புதுார் ராஜராஜன் மகளிர் கல்வியியல் கல்லுாரியில் குழந்தை உரிமைகள் மன்ற தொடக்க விழா நடந்தது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் வழக்கறிஞர் மணிமேகலை பேசினார். குழந்தை உரிமைகள் நீதிக் குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டார்.