/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ராஜகம்பீரத்தில் வாகனத்தில் அடிபட்ட புள்ளி மான் மீட்பு ராஜகம்பீரத்தில் வாகனத்தில் அடிபட்ட புள்ளி மான் மீட்பு
ராஜகம்பீரத்தில் வாகனத்தில் அடிபட்ட புள்ளி மான் மீட்பு
ராஜகம்பீரத்தில் வாகனத்தில் அடிபட்ட புள்ளி மான் மீட்பு
ராஜகம்பீரத்தில் வாகனத்தில் அடிபட்ட புள்ளி மான் மீட்பு
ADDED : ஜூலை 28, 2024 11:55 PM

மானாமதுரை : மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் ரோட்டை கடக்கும் போது புள்ளி மான் ஒன்று வாகனத்தில் அடிபட்டது. அதை கிராமத்தினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மானாமதுரை அருகே ராஜகம்பீரம், முத்தனேந்தல், கிருங்காக்கோட்டை காடுகளில் புள்ளி மான்கள் அதிகளவில் வசிக்கின்றன. இரவில் இவை தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராம தோட்டங்களுக்கு வரும். இதற்காக ரோடு, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்.
இரவு ராஜகம்பீரம் அருகே ரோட்டை கடக்க முயன்ற புள்ளி மான் ஒன்று வாகனத்தில் அடிபட்டது. அந்த மானை கிராமத்தினர் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.