ADDED : ஜூலை 28, 2024 11:56 PM
மானாமதுரை : மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பரமக்குடி, ஆலம்பச்சேரி வழியாக இளையான்குடி மற்றும் மதுரை, ஆர்.எஸ்., மங்கலத்திற்கு 3 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன.
மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் துரைராஜாமணி, அண்ணாத்துரை, நகர் செயலாளர் பொன்னுச்சாமி, பொருளாளர் மயில்வாகனன், ராஜகம்பீரம் ஊராட்சி தலைவர் முஜிபூர் ரகுமான், மேலநெட்டூர் ஊராட்சி தலைவர் சங்கீதா, நகராட்சி கவுன்சிலர்கள் இந்துமதி, சதீஷ்குமார் பங்கேற்றனர்.