கொத்தடிமை தொழிலாளர் 4 பேர் மீட்பு
கொத்தடிமை தொழிலாளர் 4 பேர் மீட்பு
கொத்தடிமை தொழிலாளர் 4 பேர் மீட்பு
ADDED : ஜூலை 11, 2024 02:30 AM
சிவகங்கை:தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கணவன், மனைவி, 9 வயது குழந்தை, முதியவர் ஆகிய 4 பேர் ரூ.1.30 லட்சம் கடனை அடைக்க சிவகங்கைக்கு கொத்தடிமை தொழிலாளர்களாக வந்துள்ளதாக தேவகோட்டை தாசில்தார், தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. குழுவினர் தேவகோட்டை தாலுகா புளியால் அருகே சின்ன பிரம்புவயல் கிராமத்தில் ஆய்வு செய்த போது, ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமையாக இருந்த 4 பேரை மீட்டனர்.
மத்திய அரசு வழங்கும் கொத்தடிமை மீட்பு நிதி தலா ரூ.30 ஆயிரம் வீதம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணியில் தொழிலாளர் நலத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.