/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மழையால் நிலக்கடலை விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் கவலை மழையால் நிலக்கடலை விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் கவலை
மழையால் நிலக்கடலை விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் கவலை
மழையால் நிலக்கடலை விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் கவலை
மழையால் நிலக்கடலை விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 11, 2024 05:04 AM
காரைக்குடி: சாக்கோட்டையில் பெய்த தொடர் மழையால் நிலக்கடலை விளைந்தும் பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவிவசாயிகள்தெரிவிக்கின்றனர்.
சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தவிர எள், நிலக்கடலை சோளம் உள்ளிட்டவைகளையும் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.சாக்கோட்டை அருகே உள்ள பெத்தாச்சி குடியிருப்பு பகுதியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். 90 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலக்கடலை மழை காரணமாக 120 நாட்களை தாண்டிய பிறகே அறுவடை செய்யப்பட்டது.
விதை, உழவு, உரம் என ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்தும் போதிய விளைச்சல் இல்லாததால் நஷ்டம் அடைந்துள்ளனர்.
விவசாயிகள்கூறுகையில்: ஒரு ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளேன்.கடந்தபங்குனியில் விதைப்பில் ஈடுபட்டோம். 90 நாட்கள் அறுவடை காலம்.தொடர் மழையால் 120 நாட்களை தாண்டிஉள்ளது.விதை கிலோ ரூ.140க்கு வாங்கினோம். 30 கிலோ விதை, உழவு, கூலி என 20 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ளோம்.தொடர் மழையால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதோடு போதிய விளைச்சலும் இல்லாமல் போனது.