/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதன பெட்டி பழுது 3 மாதமாக உடலை பாதுகாக்க முடியாத அவலம் அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதன பெட்டி பழுது 3 மாதமாக உடலை பாதுகாக்க முடியாத அவலம்
அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதன பெட்டி பழுது 3 மாதமாக உடலை பாதுகாக்க முடியாத அவலம்
அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதன பெட்டி பழுது 3 மாதமாக உடலை பாதுகாக்க முடியாத அவலம்
அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதன பெட்டி பழுது 3 மாதமாக உடலை பாதுகாக்க முடியாத அவலம்
ADDED : ஜூன் 20, 2024 04:43 AM
மானாமதுரை: மானாமதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ள குளிர்சாதன பெட்டி பழுதாகி 3 மாதங்களாகியும் அதனை சரி செய்யாததால் இறந்தவர்கள் உடல்களை பாதுகாப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
மானாமதுரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 800க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 50க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மதுரை,ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் மானாமதுரை அமைந்துள்ளதால் இந்த ரோட்டில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில் இறப்பவர்களின் உடல்களை மானாமதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் பாதுகாத்து உடற்கூறாய்வு செய்வது வழக்கம். இங்கு ஒரே நேரத்தில் 4 உடல்களை வைத்து பாதுகாக்கும் குளிர்சாதன பெட்டி உள்ள நிலையில் இந்த பெட்டி கடந்த 3 மாதங்களாக பழுதடைந்துள்ளது. உடற்கூறாய்வுக்கு வரும் உடல்களை, இங்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்க முடியாத நிலையில் இறந்தவர்களின் உறவினர்கள் தனியாரிடம் குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு எடுத்து வந்து உடலை பாதுகாக்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. பணம் கொடுத்து குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு எடுக்க முடியாதவர்கள் உடல்களை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது: குளிர்சாதன பெட்டி பழுதடைந்தது குறித்து பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.விரைவில் சரி செய்ய வேண்டுமென்று பொதுப்பணித்துறையிடம் அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.