/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சபாநாயகர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணி வேட்பாளரை நிறுத்தும்: கார்த்தி எம்.பி., சபாநாயகர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணி வேட்பாளரை நிறுத்தும்: கார்த்தி எம்.பி.,
சபாநாயகர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணி வேட்பாளரை நிறுத்தும்: கார்த்தி எம்.பி.,
சபாநாயகர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணி வேட்பாளரை நிறுத்தும்: கார்த்தி எம்.பி.,
சபாநாயகர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணி வேட்பாளரை நிறுத்தும்: கார்த்தி எம்.பி.,
ADDED : ஜூன் 20, 2024 03:01 AM
காரைக்குடி:சபாநாயகர் தேர்தலில் 'இண்டியா 'கூட்டணி தனது வேட்பாளரை நிறுத்தும் என்று நம்பிக்கை உள்ளதாக சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது:
எதிர்க்கட்சிகள் மக்கள்பிரச்னைகளை முன் வைக்கும் போது அதனை விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளும் சபாநாயகர் தான் வேண்டும். பிரியங்காவிற்கு மக்களிடையே நல்ல ஈர்ப்பு உள்ளது. வயநாடு தொகுதியில் ஏதேனும்காரணம் கூறி தேர்தலை தள்ளி போடாமல் தேர்தல்ஆணையம் விரைவில்தேர்தலை நடத்த வேண்டும்.
பிரேமலதா கூறியது வேடிக்கையாக உள்ளது. சிறியவர் என்று பார்ப்பதற்கு தேர்தல் ஒன்றும் விளையாட்டு களம் அல்ல. 25 வயதுடையவர்கள் கூட எம்.பி., ஆகியுள்ளனர். பா.ஜ., அரசின் குறிக்கோள் வேகமாக ரயில் ஓட்ட வேண்டும். சிறிய ரயில் நிலையங்கள் இருக்கக் கூடாது என்பதே. அவர்களின் கர்வத்திற்காக புல்லட் ரயில் நடத்துகின்றனர்.
இந்தியாவிற்கு புல்லட் ரயில் தேவையில்லை. ரயில்வே துறையின் நிர்வாக சீர்கேட்டால் முன்பதிவு செய்தவர்கள் தங்களது இருக்கைகளில் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.