/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு கண்டுகொள்ளாத போலீஸ் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு கண்டுகொள்ளாத போலீஸ்
ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு கண்டுகொள்ளாத போலீஸ்
ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு கண்டுகொள்ளாத போலீஸ்
ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு கண்டுகொள்ளாத போலீஸ்
ADDED : ஜூலை 15, 2024 04:53 AM
தேவகோட்டை : ரேஷன் கடைகளுக்கு அரிசி வாங்க வரும் கார்டுதாரர்களிடம் இருந்து கிலோ ரூ.8 க்கு அரிசியை வாங்கி, கடத்தும் கும்பல் அதிகரித்து விட்டனர்.
இதை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டு கொள்வதே இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
கண்ணங்குடி அருகே ஊரவயல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த சரக்கு வாகனம், கார் உள்ளிட்டவற்றை உணவு பொருள் கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தபோது அதில் இருந்த ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். இத்தொடர் பரிசோதனைக்கு பின்னரும் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துகொண்டு தான் செல்கிறது.
தேவகோட்டை பகுதி ரேஷன் கடைகளில் பெரும்பாலும் தினமும் அரிசி, சர்க்கரை உள்ளிட்டபொருட்கள் கார்டுதாரர்களுக்கு வழங்குவதில்லை. இதனால், கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
அரிசி கடத்தல் கும்பல் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில்நின்று கொண்டு, ரேஷன் கடைகளுக்கு வருவோரிடம், அரிசியை வாங்கி தருமாறு கேட்டு, கிலோவிற்கு ரூ.8 வழங்குகின்றனர். இந்த அரிசிகளை மூடைகளாக தயாரித்து, கேரளாவிற்கு கடத்துகின்றனர்.
பெரும்பாலான ரேஷன் கடை விற்பனையாளர்கள், உணவு கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவுபோலீசார் அரிசி கடத்தல் குறித்து தங்களுக்கு தெரியாது என தெரிவித்தாலும், அரிசிகடத்தல் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்தி,ரேஷன் அரிசி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.