ADDED : ஜூலை 15, 2024 04:52 AM
தேவகோட்டை : தேவகோட்டையில் காஸ்மாஸ் லயன்ஸ் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். குருசாமி அறிக்கை வாசித்தார். புதிய தலைவராக பாலமுருகன், செயலாளர் பாண்டி, பொருளாளர் கண்ணன் தேர்வாகினர். முன்னாள் மாவட்ட ஆளுநர் சண்முகசுந்தரம், நந்தகுமார், துணை ஆளுநர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் மணிகண்டன், சேவுகன் அண்ணாமலை கல்லுாரி தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.