/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனம் சந்தையில் ஆடு வாங்க குவிந்த மக்கள் திருப்புவனம் சந்தையில் ஆடு வாங்க குவிந்த மக்கள்
திருப்புவனம் சந்தையில் ஆடு வாங்க குவிந்த மக்கள்
திருப்புவனம் சந்தையில் ஆடு வாங்க குவிந்த மக்கள்
திருப்புவனம் சந்தையில் ஆடு வாங்க குவிந்த மக்கள்
ADDED : ஜூன் 11, 2024 10:58 PM

திருப்புவனம் : திருப்புவனம் வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் ஆடு, கோழி வாங்க குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை காலை பத்து மணி வரை கால்நடை சந்தையும் அதன்பின் காய்கறி சந்தையும் நடைபெறும், ஆடி, ரம்ஜான், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விசேஷ நாட்களில் கால்நடை சந்தை களை கட்டும்.
வரும் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடு, கோழி வாங்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். ஆடு, கோழி ஏற்றி செல்ல வந்திருந்த சரக்கு வாகனங்கள் ரோட்டின் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ஆறாயிரம் ரூபாயில் இருந்து ஒன்பதாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
கோழிகள் 250 ரூபாயில் இருந்து 400 ரூபாயாகவும், சேவல் 300 ரூபாயில் இருந்து 600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.