ADDED : ஜூன் 11, 2024 10:58 PM
தேவகோட்டை : கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த சாருகேசன் குடும்பத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.
மங்கலத்திற்கு காரில் தேவகோட்டை வழியாக சென்றனர். தேவகோட்டையில் இருந்து கல்லலுக்கு மருங்கிபட்டி ராஜேந்திரன் ஓட்டி வந்த சரக்கு வேன் முள்ளிக்குண்டு அருகே சென்ற போது வேனும் காரும் மோதிக்கொண்டன. காரை ஓட்டி வந்த சாருகேசன், ஐஸ்வர்யா, நந்தகுமார், கல்பனா, நான்கு வயது குழந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.