/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குளத்தை மூட எதிர்ப்பு மக்கள் சாலை மறியல் குளத்தை மூட எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்
குளத்தை மூட எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்
குளத்தை மூட எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்
குளத்தை மூட எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 10, 2024 04:43 AM
சிவகங்கை, : சிவகங்கை அருகே குளத்தை தனிநபர் சொந்தம் கொண்டாடி மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாட்டரசன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்டது இலுப்பகுடி கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இங்கு உள்ள குளத்தை தனி நபர் ஒருவர் தனக்கு சொந்தமானது என்று கூறி வருகிறார். இது சம்பந்தமான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் அந்த நபர் நேற்று அந்த குளத்தை மூட இயந்திரங்களை கொண்டு பணி செய்த நிலையில் அதனை தடுத்து நிறுத்தக்கோரி கிராம மக்கள் சிவகங்கையில் இருந்து திருப்புத்துார் செல்லும் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்படைந்தது.
சிவகங்கை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.