ADDED : ஜூலை 10, 2024 04:46 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கிளை ஆலோசனை கூட்டம், நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
கிளை தலைவர் பேராசிரியர் கோபிநாத் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
கிளைத் தலைவராக பேராசிரியர் கோபிநாத், துணைத் தலைவராக ஜெயகாந்தன், கிளைச் செயலாளராக வைகை பிரபா, துணை செயலாளராக பவதாரணி, கிளை பொருளாளராக கோவிந்தராஜன் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.