/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஊராட்சி தலைவர் நீக்கம் கருத்து கேட்பு கூட்டம் ஊராட்சி தலைவர் நீக்கம் கருத்து கேட்பு கூட்டம்
ஊராட்சி தலைவர் நீக்கம் கருத்து கேட்பு கூட்டம்
ஊராட்சி தலைவர் நீக்கம் கருத்து கேட்பு கூட்டம்
ஊராட்சி தலைவர் நீக்கம் கருத்து கேட்பு கூட்டம்
ADDED : ஜூலை 27, 2024 05:42 AM
பூவந்தி : பூவந்தி ஊராட்சி தலைவர் மீதான கருத்து கேட்பு கூட்டம் தாசில்தார் விஜயகுமார் தலைமையில் பூவந்தியில் நடந்தது.
பூவந்தி ஊராட்சி தலைவரான விஜயா ஊராட்சி திட்டங்கள் உள்ளிட்டவற்றில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நீதிமன்ற அறிவுறுத்தல் படி கலெக்டர் ,தாசில்தார் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி உறுப்பினர்களிடம் கருத்து பதிவு செய்ய உத்தரவிட்டார். நேற்று காலை 11:30 மணிக்கு பூவந்தி ஊராட்சி அலுவலகத்தில் தாசில்தார் விஜயகுமார் ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்பது பேரிடம் நேரடியாக கருத்துகளை கேட்டு பதிவு செய்தார். கருத்து கேட்பு கூட்டத்தில் தலைவர் விஜயா உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்ட முடிவு குறித்து தாசில்தார் விஜயகுமார் கூறுகையில் : இதுகுறித்த அறிக்கை மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு அனுப்பப்படும், மேல் நடவடிக்கை குறித்து கலெக்டர் முடிவு செய்வார், என்றார்.