/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மல்லாக்கோட்டையில் புதிய துணை மின் நிலையம் மல்லாக்கோட்டையில் புதிய துணை மின் நிலையம்
மல்லாக்கோட்டையில் புதிய துணை மின் நிலையம்
மல்லாக்கோட்டையில் புதிய துணை மின் நிலையம்
மல்லாக்கோட்டையில் புதிய துணை மின் நிலையம்
ADDED : ஜூலை 18, 2024 06:11 AM
திருப்புத்துார், : திருப்புத்துார் அருகே மல்லாக் கோட்டையில் புதிய துணை மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக திருப்புத்துாரில் நடந்த மின் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறை தீர் முகாமிற்கு நிர்வாக பொறியாளர் மொண்டி தலைமை வகித்தார். மக்களிடம் குறைகள் கேட்டறிந்த பின்அவர் கூறியதாவது:
திருப்புத்துார் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகமாகும் திருப்புத்துார் நகர் பகுதி இரண்டாக பிரிக்கப்படுகிறது. அதற்கான புதிய பீடர் பணிகள் நடைபெற்று வருகிறது. சில நாட்களில் அந்த பணி முடிவடைந்த பின்னர் மின் லோடு பகிர்ந்தளிக்கப்பட்டு மின் விநியோகம் மேலும் சீராவதுடன் பராமரிப்பும் விரைவாக மேற்கொள்ள முடியும்.
சேதமான மின் கம்பங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த கம்பங்களில் 50 சதவீத பணிகள் முடிவடைந்த விட்டன. மின் தடை காலங்களில் மீதமுள்ள 24 கம்பங்களிலும் புதிய மின்கம்பத்திற்கு மின் இணைப்பு மாற்றப்படும்.
மல்லாக்கோட்டை பகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டு பரிசீலனையில் உள்ளது. கூடுதல் மின்மாற்றிகள் தேவையான இடங்களில் அமைக்க ஆய்வு நடந்து வருகிறது. திருப்புத்துார் நகரிலும் நான்கு ரோடு உள்ளிட்ட இடங்களில் புதிய மின்மாற்றி அமைக்கப்படும்.