ADDED : ஜூலை 28, 2024 11:53 PM

காரைக்குடி : காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சியில் கற்சாலைகளால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். தமிழகத்தில் மிகப்பெரிய ஊராட்சியாக சங்கராபுரம் ஊராட்சி உள்ளது. இவ்வூராட்சியில், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற்போது காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சங்கராபுரம் ஊராட்சியும் இணைந்துள்ளது.
அதிக வீடுகள் உள்ள இப்பகுதிகளில் பல இடங்களிலும் சாலைகள் இல்லை. பிரபு நகர் மெயின் ரோடு, செல்லப்பா நகரில் இருந்து திருச்சி பைபாஸ் ரோடு இணைப்பு ரோடு புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இந்த ரோடு முற்றிலும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர். இந்த ரோட்டை புதுப்பிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.