ADDED : ஜூலை 21, 2024 04:49 AM
தேவகோட்டை: தேவகோட்டை அருகே நாச்சாங்குளம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின் சார்பில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் குமார் தலைமையில் நடந்தது.
எம்.எல்.ஏ. மாங்குடி துவக்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பெட்டக வழங்கினார்.
வேலாயுதப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அழகுதாஸ், வட்டார கல்வி அலுவலர்கள் லட்சுமிதேவி, சூர்யா, ஊராட்சி தலைவர் மதிமன்னன், தி.மு.க.ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம், காங். நகர் தலைவர் சஞ்சய், நிர்வாகிகள் முத்துமனோகரன், மகேந்திரன் உட்பட செவிலியர்கள் பங்கேற்றனர்.