ADDED : ஜூலை 21, 2024 04:49 AM
மானாமதுரை; கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் முத்துக்குமார்41, இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
தற்போது மானாமதுரை ஆதனுார் ரோட்டில் வசித்து வருகிறார்.குடும்பப் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த முத்துக்குமார் நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்தை குடித்து மானாமதுரை வைகை ஆற்றுக்குள் இறந்து கிடந்தார்.மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.