/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சாலைக்கிராமத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை சாலைக்கிராமத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை
சாலைக்கிராமத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை
சாலைக்கிராமத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை
சாலைக்கிராமத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை
ADDED : ஜூலை 10, 2024 04:49 AM

சாலைக்கிராமம், : சாலைக்கிராமத்தில் உள்ள திருக்காம கோடீஸ்வரி சமேத வரகுணேஸ்வரர் கோயிலில் ஆனி மக நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகர் குருபூஜை விழாவை முன்னிட்டு அம்மை அப்பர் சிவனடியார் திருக்கூட்டத்தின் சார்பில் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனை மற்றும் தீபாராதனை நடந்தது.
இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.,மங்கலம் விலக்கிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பட்டு சாலைக்கிராமத்திலுள்ள முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்தார்.
ஈரோடு திருஞானசம்பந்தர் திருமடம் சிவாக்கர தேசிக சுவாமி, கடலூர் மாவட்டம் வேப்பூர் திருநாவுக்கரசர் திருமடம் தங்கதுரை சுவாமி சொற்பொழிவு ஆற்றினர். ஏற்பாடுகளை சாலைக்கிராமம் அம்மை அப்பர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.