ADDED : ஜூன் 29, 2024 05:54 AM

சிவகங்கை, : மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி சிவகங்கையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகி ராமன் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர்கள் விஜயஜோதி, குமார் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர் சங்க செயலாளர் சித்திரைசாமி, பொருளாளர் வால்மீகிநாதன், இணை செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி, வழக்கறிஞர்கள் தங்கபாண்டியன், செந்தில்குமார், மதி பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது வழக்கறிஞர்கள் அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டிய படி கோஷம் எழுப்பினர்.