/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கீழடியில் மந்த கதியில் அகழாய்வு பணி கீழடியில் மந்த கதியில் அகழாய்வு பணி
கீழடியில் மந்த கதியில் அகழாய்வு பணி
கீழடியில் மந்த கதியில் அகழாய்வு பணி
கீழடியில் மந்த கதியில் அகழாய்வு பணி
ADDED : ஜூன் 29, 2024 05:45 AM

கீழடி : கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணிகள் கூடுதல் தொழிலாளர்களுடன் விரைவாக நடைபெறும் என கலெக்டர் அறிவித்தும் 13 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
கீழடியில் மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழாய்வில் ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன. மூன்று கட்ட அகழாய்விற்கு பின் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசுகையில் கீழடியில் 110 ஏக்கரில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும், அப்போதுதான் நதிக்கரை நாகரீகம் முழுமையாக வெளி வரும், என்றார்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு நடைபெறுவது வழக்கம், ஆனால் ஒன்பதாம் கட்ட அகழாய்வு அருங்காட்சியக பணி ஏப்ரலில் தொடங்கி செப்டம்பரில் முடிவடைந்தது. இந்தாண்டும் பத்தாம் கட்ட அகழாய்வு ஆறு மாதம் கழித்து தொடங்கியது. செப்டம்பருடன் அகழாய்வு பணி முடிவடைவதால், உரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்பில்லை என கருதப்பட்டது. தொடக்க விழாவின் போது பேசிய கலெக்டர் ஆஷாஅஜித் தாமதமாக அகழாய்வு பணிகள் தொடங்குவதால், கூடுதல் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு அகழாய்வு விறுவிறுப்பாக நடைபெறும் என அறிவித்தார். ஆனால் அகழாய்வு பணி தொடங்கி பத்து நாட்கள் ஆகியும் இதுவரை மூன்று ஆண் தொழிலாளர்களும், பத்து பெண் தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.