Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பிளஸ் 1 பொதுத்தேர்வு மையத்தில் தலைமையாசிரியரிடம் லேப்டாப்

பிளஸ் 1 பொதுத்தேர்வு மையத்தில் தலைமையாசிரியரிடம் லேப்டாப்

பிளஸ் 1 பொதுத்தேர்வு மையத்தில் தலைமையாசிரியரிடம் லேப்டாப்

பிளஸ் 1 பொதுத்தேர்வு மையத்தில் தலைமையாசிரியரிடம் லேப்டாப்

ADDED : மார் 12, 2025 05:41 AM


Google News
திருப்புவனம்,: திருப்புவனம் அருகே மணலுாரில் பொதுத்தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது லேப்டாப் பயன்படுத்திய அரசு பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலுார் தனியார் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

மணலுார், கீழடி, சயனாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 249 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வு மைய கண்காணிப்பாளராக திருப்பாச்சேத்தி அரசு பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் பிளஸ் 1 ஆங்கில பாட தேர்வு நடந்த போது பறக்கும்படை கண்காணிப்பாளர் தனலட்சுமி தலைமையில் மணலுார் பள்ளியில் சோதனை செய்தனர்.

அப்போது ஜெயக்குமார் பொதுத்தேர்வை கண்காணிக்காமல் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து பறக்கும்படையினர் லேப்டாப்பை பறிமுதல் செய்து அவரை தேர்வு பணியில் இருந்து விடுவித்தனர்.

கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:

பொதுத்தேர்வு நடைபெறும் இடங்களில் எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்பது விதி .அதனை மீறி லேப்டாப் பயன்படுத்தியதால் பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்துள்ளோம் என்றனர்.

ஜெயக்குமார் கூறியதாவது:

அலுவலக அறையில் எனது சொந்த லேப்டாப்பில் அலுவலக பணி தான் செய்து கொண்டிருந்தேன், நான் எந்ததவறும் செய்யவில்லை என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us