/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஜாதி பிரச்னையை துாண்டிய 2 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' ஜாதி பிரச்னையை துாண்டிய 2 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'
ஜாதி பிரச்னையை துாண்டிய 2 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'
ஜாதி பிரச்னையை துாண்டிய 2 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'
ஜாதி பிரச்னையை துாண்டிய 2 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 12, 2025 05:48 AM
மானாமதுரை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரைஅருகே கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் சிலர், மற்ற ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரோடு ஜாதி ரீதியிலும், ஈகோ பிரச்னையிலும் மோதல் போக்கை கையாண்டு வருவதால், மாணவர் எண்ணிக்கை இரண்டே ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துள்ளது.
கடந்த மாதம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட மாணவர்களை முட்டிப்போட வைத்ததை சில ஆசிரியர்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பியது, மாணவி ஒருவரை ஆடையை சரிசெய்ய கூறிய ஆசிரியரை குற்றம் சாட்டியது, மற்ற ஆசிரியர்களை பற்றி தவறாக எழுதும்படி மாணவர்களிடம் சில ஆசிரியர்கள் கூறியது என, இப்பள்ளியில் பல சர்ச்சைகள் எழுந்தன.
மேலும், ஆசிரியர்களின் டூ - வீலர்களை பஞ்சராக்குவது, சீட்டை கிழிப்பது போன்ற செயல்களும் நடந்தன. இதுகுறித்து, தாசில்தார் கிருஷ்ணகுமார், துணை தாசில்தார் சரவணகுமார் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
இந்நிலையில், கணித ஆசிரியர்கள் ராஜா, சாத்தையா ஆகிய இருவரையும் 'சஸ்பெண்ட்' செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.