/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மருத்துவமனைகளில் ரேடியாலஜிஸ்ட் பற்றாக்குறை ஸ்கேன் எடுக்க நோயாளிகள் காத்திருப்பு மருத்துவமனைகளில் ரேடியாலஜிஸ்ட் பற்றாக்குறை ஸ்கேன் எடுக்க நோயாளிகள் காத்திருப்பு
மருத்துவமனைகளில் ரேடியாலஜிஸ்ட் பற்றாக்குறை ஸ்கேன் எடுக்க நோயாளிகள் காத்திருப்பு
மருத்துவமனைகளில் ரேடியாலஜிஸ்ட் பற்றாக்குறை ஸ்கேன் எடுக்க நோயாளிகள் காத்திருப்பு
மருத்துவமனைகளில் ரேடியாலஜிஸ்ட் பற்றாக்குறை ஸ்கேன் எடுக்க நோயாளிகள் காத்திருப்பு
ADDED : ஜூலை 09, 2024 10:07 PM
சிவகங்கை,:தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரேடியாலஜிஸ்ட் டாக்டர்கள் பற்றாக்குறையால் ஸ்கேன் எடுப்பதற்கு நீண்ட நாட்கள் பொதுமக்கள் காத்திருக்கும் அவலம் நீடித்து வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஆனால் ஸ்கேன் எடுக்க ரேடியாலஜிஸ்ட் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.
ஸ்கேன் எடுக்க தாமதமாவதால் நோய்களின் தன்மையை கண்டறிந்து சிகிச்சை பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவ கல்லுாரி தவிர மற்ற மருத்துவமனைகளான காளையார் கோவில், மானாமதுரை, காரைக்குடி உள்ளிட்ட மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க இயந்திரம் இருந்தும் டாக்டர்கள் இல்லை. மாவட்டத்தில் பிற பகுதியில் இருந்து ஸ்கேன் எடுக்க சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கே வருகின்றனர். மருத்துவ கல்லுாரியில் 7 டாக்டர் பணிபுரிய வேண்டிய இடத்தில் மூன்று டாக்டர் தான் உள்ளனர். இவர்களும் ஒரு நாளைக்கு 60 பேருக்குத்தான் ஸ்கேன் எடுக்க முடியும்.
டாக்டர்கள் கூறுகையில், ரேடியாலஜிஸ்ட் துறையில் தமிழகம் முழுவதும் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ஒரு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு ஒரு டாக்டர் குறைந்தது 100 பேருக்கு ஸ்கேன் எடுக்கும் நிலை உள்ளது. இதனால் டாக்டர்கள் பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். மாணவர்களும் ரேடியாலஜிஸ்ட் துறையை தேர்வு செய்து படிப்பதற்கு யோசிக்கின்றனர். பொதுவாக அல்ட்ரா சவுண்ட் துறையை தேர்ந்தெடுக்க தயங்குகின்றனர். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.